பிக்பாஸ்-க்கு போட்டியாக ஜீடிவியில் ஒரு நிகழ்ச்சி: தனித்தீவில் 100 நாட்கள் தங்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ்-க்கு போட்டியாக ஜீடிவியில் ஒரு நிகழ்ச்சி: தனித்தீவில் 100 நாட்கள் தங்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் குறிப்பாக தமிழில் நான்கு சீசன்கள் முடிவடைந்து தற்போது 5வது சீசனுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் சர்வைவர் போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்படி ஒரு தனி தீவில் 100 நாட்கள் போட்டியாளர்கள் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து கொண்டு அவர்கள் நிகழ்ச்சி குழுவினர் தரும் டாஸ்குகளில் ஈடுபட வேண்டும். அதில் ஒருவர் 100 நாட்கள் கழித்து டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்படுவார்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ் பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்திய உரிமையை மும்பையின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் தமிழில் இந்த நிகழ்ச்சியை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜீதமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்க இருப்பதாகவும் இதற்காக தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள தனி தீவு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவில் 100 நாட்கள் தங்கப் போகும் போட்டியாளர்கள் யார் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகளும் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com