5 படம், ரூ.75 கோடி சம்பளம்.. சிவகார்த்திகேயனை மொத்தமாக அள்ளிய பட நிறுவனம்!

சிவகார்த்திகேயன் தன் நண்பர்களுக்காகச் செய்த சில படங்களால் ஏற்பட்ட நட்டத்தைத் தான் அளிப்பதாக ஒப்புக்கொண்டார்.
5 படம், ரூ.75 கோடி சம்பளம்.. சிவகார்த்திகேயனை மொத்தமாக அள்ளிய பட நிறுவனம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்கினால் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதற்காக மொத்தமாக 75 ஓடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிவகார்த்திகேயன் தன் நண்பர்களுக்காகச் செய்த சில படங்களால் ஏற்பட்ட நட்டத்தைத் தான் அளிப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்காக சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் 20 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ்க்கு ஒகே செல்லி இருப்பார் என்று கூறுகின்றன.

இந்த 5 படத்தில் 1 படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை மெரினா படம் மூலமாக அறிமுகம் செய்த பாண்டி ராஜ், இவரை வைத்து கேடி பில்லா, கில்லாடி ரங்கா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனைப் போன்று நடிகர் தனுஷும் கலைப்புலி தாணுவுக்கு 3 படமும், சத்ய ஜோதி பட நிறுவனத்துக்கு 3 படமும் நடிக்க ஒப்பந்தம் போட்டு நடித்து வருகிறார்.

இவர்களை இருவரை போல ஐஷரி கனேஷுக்கு 3 படம் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டு அதற்கான முன்பணத்தையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com