அண்ணாத்த தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணையும் சிறுத்தை சிவா!

அஜித்தை வைத்துத் தொடர்ந்து 4 படங்களை இயக்கி இருந்தார் இயக்குனர் சிவா. அதில் கடைசியாக அவர் இயக்கிய விசுவாசம் படம் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தை விட அதிக வசூலைப் பெற்றது.
அண்ணாத்த தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணையும் சிறுத்தை சிவா!

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தை மீண்டும் சிறுத்த சிவா இயக்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே தல அஜித்தை வைத்துத் தொடர்ந்து 4 படங்களை இயக்கி இருந்தார் இயக்குனர் சிவா. அதில் கடைசியாக அவர் இயக்கிய விசுவாசம் படம் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தை விட அதிக வசூலைப் பெற்றது.

தொடர்ந்து ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்குக் கிடைத்தது. விசுவாசம் படம் எப்படி அப்பா, மகள் செண்டிமெண்ட்டோ, அதே போன்று அண்ணாத்த படம் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் என்று கூறப்படுகிறது.

மே 10-ம் தேதியுடன் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டார்.

ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை எடுத்த தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்தும் இருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை சிவாவே இயக்குகிறார் என்றும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com