‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி பாடிய பாடல் ரிலீஸ்: எந்த படத்திற்காக தெரியுமா?

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி பாடிய பாடல் ரிலீஸ்: எந்த படத்திற்காக தெரியுமா?

‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான ஷிவாங்கி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் அவர் ’முருங்கக்காய் சிப்ஸ்’ என்ற திரைப்படத்திற்காக பாடிய பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்லைஎன்று தொடங்கும் இந்த பாடலை ஷிவாங்கியும் அவருடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாம் விஷாலும் பாடியுள்ளனர். இந்த பாடலை ஷிவாங்கியின் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

சாந்தனு பாக்கியராஜ் ஹீரோவாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாக்கியராஜ், யோகிபாபு, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தை ஸ்ரீஜார் இயக்கி உள்ளார் என்பதும் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com