தடுப்பூசி வேலை செய்கிறது: 102 டிகிரி காய்ச்சலுடன் கூறிய நடிகை!

தடுப்பூசி வேலை செய்கிறது: 102 டிகிரி காய்ச்சலுடன் கூறிய நடிகை!

தடுப்பூசி போட்ட கொண்டதால் தனக்கு 102 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு போட்ட தடுப்பூசி இதனால் நன்றாக வேலை செய்கிறது என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின். இவர் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஷெரின் சமீபத்தில் தான் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் ஒரு பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் சுவடியில் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தனது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உடல்நிலை தற்போது சரியில்லை என்றும் காய்ச்சல் 102 டிகிரி அளவுக்கு இருப்பதாகவும் தாங்க முடியாத உடல்வலி மற்றும் தலைவலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உடல் முழுவதும் மிகவும் சோர்வாக இருப்பதாக தெரிவித்த அவர், இந்த உபாதைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இருந்தாலும் தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது என்பதையே இவை காட்டுகின்றன என்றும் அதனால் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகை ஷெரினின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com