ஆர்பி செளத்ரியே விஷாலை புகார் கொடுக்க சொன்னாரா? கோலிவுட்டில் தீயாய் பரவும் வதந்தி!

ஆர்பி செளத்ரியே விஷாலை புகார் கொடுக்க சொன்னாரா? கோலிவுட்டில் தீயாய் பரவும் வதந்தி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார் என்பதும் அந்த புகாரில் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுத்த பின்னரும் ஆர்பி செளத்ரி, தான் கொடுத்த ஆவணங்களைக் கொடுக்க மறுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விஷாலே தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் கொடுத்த இந்த புகாரின் அடிப்படையில் கோலிவுட்டில் பல வதந்திகள் உலவுகின்றன. அவற்றில் ஒன்று விஷாலிடம் ஆர்பி சவுத்ரியே காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. விஷால் கொடுத்த ஆவணங்கள் தொலைந்து விட்டதால், அந்த ஆவணங்கள் வேறு யாரிடமாவது சிக்கி, விஷாலுக்கு பின்னாளில் தொந்தரவு கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து விடுங்கள் என்றும், அந்த புகாரே ஒரு ஆவணமாக பின்னாளில் பயன்படும் என்று அவர் கூறியதாகவும், அதனை அடுத்து விஷால் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

மேலும் விஷால் ஏற்கனவே பிரபல பைனான்சியர் ஒருவரிடம் கடன் வாங்கி, இதேபோல் ஆவணங்களை அவர் திருப்பி தராததால், அவரது படம் ஒன்று ரிலீசாகும் நேரத்தில் திடீரென அந்த ஆவணங்களை வைத்து விஷாலை மிரட்டியதால் ஏற்பட்ட அனுபவம் காரணமாகத்தான் விஷால் தற்போது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் இன்னொரு வதந்தி பரவி வருகிறது. உண்மையில் ஆர்பி சவுத்ரி, விஷால் குறித்த விவகாரத்தில் உண்மை நிலை அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும் என்றும் கோலிவுட்டில் உள்ள சிலர் கூறி வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com