கொரோனா நிவாரண நிதி: ரஜினிகாந்த் மகள் கொடுத்த ரூ.1 கோடி!

கொரோனா நிவாரண நிதி: ரஜினிகாந்த் மகள் கொடுத்த ரூ.1 கோடி!

தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வரும் நிலையில் தாராளமாக நிதி வழங்கி தமிழக அரசுக்கு உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக நிதி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் ரூபாய் ஒரு கோடி, அஜித் ரூபாய் 25 லட்சம், ஏஆர் முருகதாஸ் ரூபாய் 25 லட்சம் என திரையுலகினர் நிவாரண நிதி வழங்கி உள்ள நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ரூபாய் ஒரு கோடி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com