கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினி!

ரஜினி, தான் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த், இன்று கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இது குறித்த தகவலை அவரது மகளான சவுந்தரியா ரஜினிகாந்த், ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ரஜினி, தான் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் ஒரு ஷெட்யூலை முடித்துக் கொடுத்துள்ளார். அவர் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று முடித்துவிட்டு இன்று தான் சென்னை திரும்பினார். அப்படி வந்த அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ரஜினிக்கு உடலில் பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளதால், கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் இருந்தார். அதே நேரத்தில் அவர் தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இதன் மூலம் அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்று தெரிகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com