பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் தமிழ் திரை உலகம்!

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி.
பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் தமிழ் திரை உலகம்!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. வட சென்னை, பிகில் உட்படப் பல தமிழ் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது தெலுங்கு படமான டக் ஜகதீஷ் மற்றும் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டேனியல் பாலாஜிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கு வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com