நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் ரிலீஸ்!

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் ரிலீஸ்!

நடிகை நயன்தாரா நடிப்பில் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகி வைரல் ஆன நிலையில் சற்று முன் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் கார்த்திக் நீதா பாடல் வரிகளில் ’இதுவும் கடந்து போகும்’ என்ற இந்த மெலடி பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். சித்ஸ்ரீராம் காந்த குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை முதலில் கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் தற்போது யூ டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அவள்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார் என்பதும் இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் என்றும் கூறப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com