சிம்புவின் ‘மாநாடு’ சிங்கிள் ரிலீஸ் தேதி எப்போது? யுவனின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்புவின் ‘மாநாடு’ சிங்கிள் ரிலீஸ் தேதி எப்போது? யுவனின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வெகு விரைவில் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ‘மாநாடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என யுவன்சங்கர்ராஜா சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

யுவன்சங்கர்ராஜா, சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இணையும் கூட்டணியின் பாடல் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏசந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com