நீண்ட இடைவெளிக்கு பின் ‘மாமனிதன்’ அப்டேட் தந்த யுவன்ஷங்கர் ராஜா!

நீண்ட இடைவெளிக்கு பின் ‘மாமனிதன்’ அப்டேட் தந்த யுவன்ஷங்கர் ராஜா!

இளம் இசைஞானி யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த ‘மாமனிதன்’ திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சற்றுமுன் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. இந்த நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளதாக யுவன்சங்கர்ராஜா அறிவித்துள்ளார். ஏ ராசாவே என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்த காயத்ரி இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் ஜோக்கர் படத்தில் நாயகனாக நடித்த குரு சோமசுந்தரம் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் முதன்முதலாக இசையமைத்துள்ளனர் என்பதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com