‘தளபதி 66’ படத்தின் அடுத்த வதந்தி: கீர்த்தி சுரேஷ் நாயகியா?

‘தளபதி 66’ படத்தின் அடுத்த வதந்தி: கீர்த்தி சுரேஷ் நாயகியா?

நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படும் தளபதி 66 திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் இந்த தகவல் விஜய் தரப்பினரிடமிருந்து அல்லது தயாரிப்பாளர் தரப்பினர் இடமிருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தற்போது விஜய்யின் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தற்போது புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் விஜய்யுடன் நடிக்க உள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு ஜோடி சேர உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

உண்மையில் விஜய் தற்போது நடித்து வரும் 65வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 70% நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? என்று தெரியாத நிலையில் அடுத்த படத்திற்கான வதந்தியை சமூக வலைதளங்களில் பலர் பரப்பி வருவது கேலிக்குரியது என்று விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் வட்டாரங்கள் கூறுகின்றன எனவே விஜய் 66 படம் குறித்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் விஜய் ரசிகர்கள் அதனை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com