தளபது 66-ல் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

தளபதி 65 படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தளபது 66-ல் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

விஜய் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய, நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தளபதி 65 என்று கூறப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்தது. இப்போது சென்னையில் நடத்த வேண்டிய படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாகத் தடையாகியுள்ளது. ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார்.

தளபதி 65 படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியவர் என்று குறிப்பிடத்தக்கது. ஜீம் மூலமாக வம்சி சொன்ன கதையை கேட்டு விஜய் ஓகே சொன்னதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com