கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கின்றார்களா?

கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கின்றார்களா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ’சபாஷ் நாயுடு’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் கமல்ஹாசனின் மகள் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஒரு ஷெட்யூல் மட்டும் நடந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’விக்ரம்’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி குறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் ’விக்ரம்’ படத்தில் நடிப்பதற்காக எனக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் இனிமேல் அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகள் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க வைக்க ஸ்ருதிஹாசனை அணுகலாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனிடம் ஆலோசனை தெரிவித்ததாகவும் கமல்ஹாசன் அதற்கு இன்னும் முடிவு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com