கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க: நடிகர் காளி வெங்கட் ஆதங்கம்!

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க: நடிகர் காளி வெங்கட் ஆதங்கம்!

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்கள் என ஊடகங்களை நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் காளி வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று இந்த வீடியோவை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் ஆக்சிஜன் லெவல் குறைந்ததாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்தபோது படுக்கை கிடைக்கவில்லை என்றும் அதனால் தன்னுடைய நண்பர் ஒருவர் மருத்துவராக இருந்ததால் அவரிடம் ஆலோசனை பெற்று வீட்டிலேயே சிகிச்சை பெற்றதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோவை வைத்து யூடியூபில் உள்ளவர்களும் ஒரு சில இணையதளங்களும் திடுக்கிட வைக்கும் அளவிற்கு தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டார்கள். இதற்கு ஏற்கனவே நடிகர் காளி வெங்கட் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ஊடகம் பகீர் வீடியோ என தலைப்புடன் செய்தி போட்டு இருந்ததை பார்த்த காளிவெங்கட், ‘நான் மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமானேன். இதில் என்ன ‘பகீர்’ வேண்டியிருக்கு. என்னுடைய அனுபவத்தை நான் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வீடியோவை வெளியிட்டேன். மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நீங்கள் கொஞ்சம் பொறுப்புடன் செய்தி போடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த டுவிட் வைரல் ஆகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com