மூன்றே மாதங்களில் 25 கோடி பார்வையாளர்கள்: யூடியூபில் ’என்ஜாய் என்ஜாமி’ செய்த சாதனை

மூன்றே மாதங்களில் 25 கோடி பார்வையாளர்கள்: யூடியூபில் ’என்ஜாய் என்ஜாமி’ செய்த சாதனை

கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகிய இருவரும் இணைந்து பாடிய பாடல் ’என்ஜாய் என்ஜாமி’. இந்த பாடல் யூ டியூபில் 25 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை செய்துள்ளது.

ஆங்கில தனிப்பாடல்கள் தான் இதுவரை மிக அதிகமாக பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ள நிலையில் தற்போது ஒரு தமிழ் பாடலும் யூடியூபில் 25 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது திரைஉலக பிரபலங்களையே ஆச்சர்யப்பட வைத்தது என்பது குறிப்பிடதக்கது.

இயற்கை சீரழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பதும் அவரது மகள் தீ மற்றும் பிரபல தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெருக்குரல் அறிவு பாடிய ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ பாடலும் யூடிபில் மிகப் பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

’குக்கூ குக்கூ’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் வைரலானது என்பதும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மக்கள் மனதில் பதிய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூபில் மூன்றே மாதத்தில் 25 கோடிக்கு மேல் ஒரு தமிழ் பாடல் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளதை அடுத்து இந்த பாடலின் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com