இவரெல்லாம் அட்வைஸ் செய்கிறாரே? நொந்து நூலாகி போன கமல் கட்சி தொண்டர்கள்!

இவரெல்லாம் அட்வைஸ் செய்கிறாரே? நொந்து நூலாகி போன கமல் கட்சி தொண்டர்கள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் ஆளாளுக்கு அவருக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சற்றுமுன் கமல்ஹாசனை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கலாய்த்து வந்த நிலையில் தற்போது இரண்டே படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் கமல்ஹாசனுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதை பார்த்த கமல் கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் இவரெல்லாம் அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்களே என்று நொந்து நூலாகி கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் மோகன், கமல்ஹாசனின் அரசியல் குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை’ என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டை பார்த்த கமல் ரசிகர்கள் இயக்குனர் மோகனுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஊழல் பெருச்சாளிகள் இருக்கும் அரசியலில் ஒரு நேர்மையாளர் வந்தால் அவரை அரசியலில் இருந்து விரட்டி அடிப்பதில் குறியாக கொண்டு பலர் செயல்பட்டு வருகிறார்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com