தனுஷ் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் படம்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் படம்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

தனுஷ் நடித்து முடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் தற்போது அவர் ஹாலிவுட் படமான ’தி கிரே மேன்’ மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் இரண்டு படங்களில் தொடர்ச்சியாக அவர் நடிக்கப் போகிறார் என்பதும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க போகிறார் என்பதும் கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட கால கனவாக இருந்தது என்றும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் சல்மான்கானின் ’ராதே’ என்ற தோல்வி படத்தை பிரபுதேவா இயக்கியதால் இந்த படத்தை யாரும் தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த படத்தை தனுஷே தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் படங்கள் தயாரிக்காத நிலையில் மீண்டும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பு பணியை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் ‘போக்கிரி’ போல் ஒரு அதிரடி ஆக்சன் மசாலா படம் என்றும் கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com