’குக் வித் கோமாளி’ சீசன் 3: மொத்தம் 10 கோமாளிகள் என தகவல்!

’குக் வித் கோமாளி’ சீசன் 3: மொத்தம் 10 கோமாளிகள் என தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக சீசன் 2 மிகப் பெரிய வரவேற்பை பெற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் பெரிய அளவில் பிரபலமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் ’குக் வித் கோமாளி சீசன் 3 உருவாக தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ’குக்’கள் தேர்வு செய்யும் பணி ஆரம்பம் ஆகி விட்டதாகவும் கோமாளிகளை பொறுத்தவரை இரண்டாவது சீசனில் இருந்த 8 பேரும் அப்படியே இருப்பார்கள் என்றும் அவர்களை தவிர மேலும் இருவர் கோமாளிகளாக இணைக்கப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து மொத்தம் 10 கோமாளிகள் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் ஒருவர் குரோஷி என்றும் இன்னொருவர் ‘முரட்டு சிங்கிள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த முறை ’குக்’கள் வித்தியாசமான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தொலைக்காட்சியை பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆகிய இருவரும் கலந்த ஒரு கலவையாக இந்த முறை ’குக்’கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. முதல் இரண்டு சீசனை போலவே மூன்றாவது சீசனையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com