சகோதரர் தினத்தில் பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்: இணையதளத்தில் வைரல்!

சகோதரர் தினத்தில் பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்: இணையதளத்தில் வைரல்!

இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து பல பிரபலங்கள் தங்களுடைய சகோதரர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி தனது சகோதரர்களாகிய நாகேந்திர பாபு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். சிறுவயதில் மூவரும் இருக்கும் இந்த புகைப்படத்தில் கிட்டத்தட்ட கைக்குழந்தையாக இருக்கிறார் பவன்கல்யாண்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யான் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு திரையுலக பிரபலங்களும் ரசித்து தங்களுடைய மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றார்கள்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com