பிரபல நடிகர் தொடங்கிய ஆக்சிஜன் வங்கி: இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என பேட்டி!

பிரபல நடிகர் தொடங்கிய ஆக்சிஜன் வங்கி: இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என பேட்டி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது அரிதாக உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் கிடைப்பதில் இன்னும் பற்றாக்குறை இருந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல நடிகர் சிரஞ்சீவி தனது மகனும் நடிகருமான ராம்சரண் தேஜாவுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்த ஆக்சிஜன் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் ஆக்சிஜன் தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இனி ஒரு உயிர் கூட ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என்பதே தங்களுடைய விருப்பம் என்றும் சிரஞ்சீவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர்களின் இந்த முயற்சிக்கு அம்மாநில மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com