கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் புளுசட்டை மாறன்! இணையத்தில் பரபரப்பு

கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் புளுசட்டை மாறன்! இணையத்தில் பரபரப்பு

யூடியூபில் திரைப்பட விமர்சனம் செய்து வரும் புளுசட்டை மாறன் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. அஜித் விஜய் உள்பட அனைத்து மாஸ் நடிகர்களின் படங்களை கேலியும் கிண்டலும் செய்து விமர்சனம் செய்து வருவதால் நெகட்டிவ் விமர்சனம் காரணமாகவே இவர் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற திரைப்படத்தை புளுசட்டை மாறன் இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது அவருடைய யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் புளுசட்டை மாறன் போஸ்டர் கண்ணீர் அஞ்சலியுடன் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புளுசட்டை மாறன் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த படத்திற்கு வில்லியம்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com