ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் பிரபலத்தின் படம்: ரசிகர்கள் குஷி!

ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் பிரபலத்தின் படம்: ரசிகர்கள் குஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவரின் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு குஷியாக உள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கவின். இவர் இடையிலேயே ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது நண்பர்களுக்காக விட்டுக் கொடுத்தார் என்ற சர்ச்சையும் எழுந்தது உண்டு.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவின் நடித்து வந்த திரைப்படம் ’லிப்ட்’. இந்த திரைப்படத்தில் நாயகியாக பிகில் திரைப்படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கேரக்டரில் கவின் மற்றும் அமிர்தா நடித்துள்ள நிலையில் இந்த படம் ஒரு திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஜூன் மாதம் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்குள் ஒரு வேளை திரையரங்குகள் திறக்கப்பட்டால் திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com