ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரை அவமதித்தது இந்த சென்னை பள்ளியா? தீயாய் பரவும் வீடியோ

ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரை அவமதித்தது இந்த சென்னை பள்ளியா? தீயாய் பரவும் வீடியோ

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தன்னையும் தனது தாயாரையும் ஒரு பள்ளி அவமதித்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் நிலையில் அது இந்த பள்ளி தானா? என நெட்டிசன்கள் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார், அந்த பேட்டியில் அவர் தன்னையும் தனது தாயாரையும் பிரபல பள்ளி நிர்வாகம் தரக்குறைவாக பேசியதாகவும், உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் உள்ள தெருத்தெருவாக அழைத்துக் கொண்டு போங்கள், அவர்கள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று கூறி அவமதித்ததாக கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்ட அந்த பள்ளி, எந்த பள்ளி ஆக இருக்கும் என நெட்டிசன்கள் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளனர். தற்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பள்ளிதான் என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு மட்டுமே உண்மையில் அந்த பள்ளி எந்த பள்ளி என்பது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தகவல் இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது என்பது மட்டும் உண்மை.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com