கொரோனா நிதியாக அஜித் கொடுத்த மிகப்பெரிய தொகை!

கொரோனா நிதியாக அஜித் கொடுத்த மிகப்பெரிய தொகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசுக்கு நிதி வழங்கி வரும் திரையுலக பிரபலங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடியும், ஏஆர் முருகதாஸ் 25 லட்சமும், உதயநிதி ஸ்டாலின் 25 லட்சமும், முதலமைச்சரிடமும் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் தல அஜித் அவர்கள் கொடுத்த தொகை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. தல அஜித் அவர்கள் தமிழக அரசுக்கு நேரடியாக வங்கி பரிமாற்றம் மூலம் ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கி உள்ளதாக சற்றுமுன் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவரது மேனேஜர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில மீடியாக்கள் அஜித் ரூபாய் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியிட்டு கொண்டிருப்பதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அஜித் 25 லட்ச ரூபாய் தான் வழங்கியுள்ளார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், முருகதாஸ் உள்பட பலர் கொரோனா வைரஸ் நிதி அளித்ததை அடுத்து மேலும் ரஜினி, கமல், விஜய் உள்பட மேலும் பலர் இன்று நிதி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com