நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த ஒரு லட்சம் நிதியுதவி: யாருக்கு தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த ஒரு லட்சம் நிதியுதவி: யாருக்கு தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் நிதி உதவி செய்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வருமானமின்றி இருப்பதாகவும் பெப்சி தொழிலாளர்களுக்கு பெரிய நடிகர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்று ஆர்கே செல்வமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்த செய்தியும் வெளி வந்தது என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்களை அடுத்து நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில் முதல்நபராக சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த நடிகர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இந்த தகவல் வெளியானவுடன் நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com