காமெடி நடிகர் சார்லி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: என்ன காரணம்?

காமெடி நடிகர் சார்லி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: என்ன காரணம்?

நடிகர் சார்லி தான் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை என்றும் தனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில், என்னுடைய அனுமதி இன்றி, இன்று ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசின் காவல் துறைக்கு என் நன்றியும் வணக்கமும்’ என தனது புகார் மனுவில் சார்லி கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலங்களின் பெயர்களில் போலியாக கணக்கு தொடங்குவது மிக அதிக அளவில் நடந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எனவே சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகளில் இதற்கு ஒரு வரையரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com