எனக்கும் பள்ளியில் மோசமான அனுபவங்கள் நிகழ்ந்தன்: ‘96’ நடிகையின் திடுக் தகவல்!

எனக்கும் பள்ளியில் மோசமான அனுபவங்கள் நிகழ்ந்தன்: ‘96’ நடிகையின் திடுக் தகவல்!

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தற்போது தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் மற்ற பள்ளிகளிலும் இதே போன்ற ஆசிரியர்களின் தொல்லை இருந்தது தற்போது ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பள்ளி கால கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

மாணவிகளுக்கு பள்ளியில் நடைபெறும் கொடுமைகள் ஒன்றும் புதிதல்ல. நான் படித்த பள்ளியிலும் இதே போன்ற சம்பவங்களை எதிர்கொண்டேன். பொதுவாக நாம் பள்ளிப் பருவங்களில் நினைத்துப் பார்க்கும்போது இனிமையாக இருக்கும். ஆனால் எனக்கு பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்தது போலவே கசப்பான அனுபவங்களும் நிகழ்ந்துள்ளன. இது போன்ற கொடுமைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். என்னை போலவே என்னுடைய பள்ளியில் படித்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசமான ஆசிரியர்களுக்கு ஒரு பயம் வரும்.

நான் எனக்கு கசப்பான அனுபவங்களை கொடுத்து ஆசிரியர்களின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் இதை தெரிவிப்பதன் மூலம் எனது நீண்டகால பாரத்தை இறக்கி வைத்தது போன்று உணர்கிறேன். பாடகி சின்மயி உள்ளிட்டவர்கள் இந்த பிரச்சினையை முன்னெடுத்து பேச வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கௌரி கிஷானின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com