21 வயதில் விமானியான இளம்பெண்: முதல் ரைடிலேயே சொந்த கிராமத்தை வட்டமடித்து மகிழ்ச்சி!

21 வயதில் விமானியான இளம்பெண்: முதல் ரைடிலேயே சொந்த கிராமத்தை வட்டமடித்து மகிழ்ச்சி!

21 வயதில் விமானி ஆக பதவியேற்ற இளம்பெண் ஒருவர் இளம் வயதிலேயே விமானியாகி முதல் ரைடில் தனது சொந்த கிராமத்தை வானத்தில் வட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த 21 வயது ஜெனி ஜெரோம் என்பவர் தனது பள்ளி காலத்தில் இருந்தே விமானி ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அவருடைய கனவு ஒருவழியாக சமீபத்தில் பலித்தது. அவர் சமீபத்தில் துணை விமானி ஆக பதவி ஏற்றார். மேலும் மிக குறைந்த வயதில் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த ஏர் அரேபியா என்ற விமானத்தில் இணை விமானி ஆக ஜெனி ஜெரோம் பணியாற்றினார். அந்த விமானம் திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது தனது சொந்த கிராமத்தையும் ஒரு ரவுண்ட் அடித்து அதன் பின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கினார். அவர் ஓட்டி வந்த விமானம் சொந்த கிராமத்தில் வட்டமடித்தபோது அந்த கிராமத்தின் மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இளம் வயதிலேயே விஞ்ஞானி ஆக மாறிய ஜெனி ஜெரோமை கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ’கேரளாவில் வயது குறைந்த பெண் வணிக விமானி என்ற பெருமை பெற்ற ஜெனிக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பெருமையில் கேரளா பங்கு கொள்கிறது. பள்ளிப் பருவ கனவை நனவாக்கி சாதனை படைத்த அவருடைய வாழ்க்கை பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஊக்கமாக இருக்கும். ஆணும் பெண்ணும் சமம் என்ற சமுதாய நீதியை உணர்த்தும் விதமாக ஜெனி ஜெரோமின் ஆகாய பயண சாதனை உணர்த்தியுள்ளது. ஜெனி ஜெரோமின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொடுத்த அவருடைய பெற்றோர் சமூகத்திற்கு ஓர் முன்னுதாரணம். பெண் குழந்தைகளுக்கு ஊக்க மருந்தாக செயலாற்ற இந்த சமூகம் முழுவதும் முன்வர வேண்டும். ஜெனி ஜெரோம் மென்மேலும் வாழ்வில் வானளவில் உயர வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com