போனிகபூரா இது? வலிமை அப்டேட் தந்ததால் ஆச்சரியத்தில் அஜித் ரசிகர்கள்!

போனிகபூரா இது? வலிமை அப்டேட் தந்ததால் ஆச்சரியத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது என்றாலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும்போது 'வலிமை' படத்தின் அப்டேட்டை தந்த படக்குழுவினர், அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் தராததால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி உள்பட பலரிடமும் 'வலிமை' அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி சொல்லிமாளாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக போனி கபூரை அஜித் ரசிகர்கள் திட்டாத வார்த்தைகளே இல்லை என்றும் கூறலாம். இந்த நிலையில் சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'வலிமை' படத்தின் அப்டேட்டை தந்துள்ளார். 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி வருவதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக அதிகாரபூர்வமான அப்டேட் எதுவும் வராததால் அதிருப்தியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு போனிகபூரின் இந்த டுவிட் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com