கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய போது ஏராளமான பொது மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்தார். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் அவர் யார் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்பது குறித்த சிந்தனையில் இருந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக அறிவித்து உள்ளார்.

இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை அடுத்து இன்னும் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com