தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுதாக்கல்

தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுதாக்கல்

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பேட்டியளித்த மன்சூர் அலிகான், விவேக் மரணம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி போட்டதால் தான் ஏற்பட்டது என்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு தேவை இல்லை என்றும் யார் கேட்டது இந்த தடுப்பூசியை என்றும் ஆவேசமாக பேட்டி அளித்தார்.

இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கொரோனா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென அவர் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com