அப்துல்கலாம் நியமனம் செய்த காமெடி நடிகருக்கு மத்திய அரசின் விருது!

அப்துல்கலாம் நியமனம் செய்த காமெடி நடிகருக்கு மத்திய அரசின் விருது!

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட காமெடி நடிகர் ஒருவருக்கு மத்திய அரசின் கவுரவ விருது கிடைத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கல்வித்துறையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக நியமனம் செய்யப்பட்டவர் நடிகர் தாமு. இவர் பாலசந்தர் இயக்கிய 'வானமே எல்லை' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த தாமு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் நியமனம் செய்த பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களின் கல்விக்காக சேவை செய்து வரும் நடிகர் தாமுவுக்கு தற்போது ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021 என்ற மத்திய அரசின் கவுரவ விருது கிடைத்துள்ளது. இந்த விருதை தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கௌரவ விருது பெற்ற நடிகர் தாமுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com