இந்தியா

திருப்பதி ஏழுமலையான் சேனலில் சினிமா குத்துப்பாடல்களா? கொந்தளித்த பக்தர்கள்

Published

on

திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் சொந்தமான சேனலில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஏழுமலையானுக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் சம்பந்தப்பட்ட பாடல்கள் ஒலிபரப்பாகும் என்பது தெரிந்ததே.

இந்த சேனலை நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று மாலை திடீரென திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் சொந்தமான டிடிடி சேனலில் சினிமா பாடல்கள் மற்றும் குத்து பாடல்கள் ஒளிபரப்பு ஆகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்த போது பாடல்கள் ஒளிபரப்பு செய்யும் கேசட் மாறி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் இனிமேல் இந்த தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

டிடிடி தேவஸ்தான சேனலில் சினிமா பாடல்கள், குத்து பாடல்கள் ஒளிபரப்பானது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version