சினிமா

HBD Chiyaan: சியான் விக்ரம் பிறந்தநாள்.. CDP வெளியிட்டு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

Published

on

இந்திய சினிமாவிலேயே இது போன்று வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி நடிப்பவர்கள் வெகு சிலர் மட்டுமே என்று சொல்லலாம். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது என்பதை போல சியான் விக்ரம் கஷ்டப்பட்டு தனக்கென்று இப்படியொரு சாம்ராஜ்யத்தை சினிமாவில் உருவாக்கி ஆதித்த கரிகாலனாக ஆட்சி செய்து வருகிறார்.

1990ல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமான விக்ரம் பல போராட்டங்களையும், தோல்விகளையும் அவமானங்களையும் கடந்து சினிமாவில் எவ்வளவு முட்டினாலும் வெற்றி கிடைக்கவில்லையே என்கிற வேதனையிலும் வலியிலும் தொடர்ந்து முட்டுவதை நிறுத்தாமல் முட்டிக் கொண்டே இருந்தார்.

#image_title

தட்டுங்கள் திறக்கப்படும்.. கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது போல விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக விக்ரமின் பெரு முயற்சிக்கு பலனாக சேது படம் அவருக்கு அமைந்தது.

இயக்குநர் பாலா ஜாலியான காலேஜ் ஸ்டூடன்ட் வாழ்க்கையை காட்டிக் கொண்டே வந்து திடீரென இரண்டாம் பாதியில் அப்படியே ரசிகர்களை ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்திற்கு கொண்டு சென்று விக்ரமை அந்தக் கோலத்தில் காட்டி கண்களை குளமாக்கி விட்டார்.

#image_title

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் எனும் விவேக் காமெடி போல சியான் விக்ரமின் இரு மாறுபட்ட தோற்றத்தையும் படத்தில் பார்த்த ரசிகர்கள் விக்ரம் என்கிற பெயரையும் தாண்டி இன்றளவும் சியான் என்றே அழைத்து வருகின்றனர்.

சேதுவை தொடர்ந்து காசி படத்தில் கண் தெரியாதவராக நடித்து கலக்கினார். தில், ஜெமினி, தூள், சாமி உள்ளிட்ட படங்களை கொடுத்து ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி விஜய், அஜித்துக்கு செம டஃப் ஆன போட்டியாளராக உருவெடுத்த சியான் விக்ரமின் 57வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

#image_title

அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு விக்ரம் நடித்த கதாபாத்திரங்களை கொண்டே உருவாக்கப்பட்ட சிடிபியை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தில் இருந்து சின்ன க்ளிம்ஸ் ஒன்று இன்று காலை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதித்த கரிகாலனாக மீண்டும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மூலம் வரும் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ஆட்சி நடத்த காத்திருக்கிறார் விக்ரம்.

Trending

Exit mobile version