உலகம்

அமெரிக்கா, கனடாவிலிருந்து வரும் தபால்களில் ஓமிக்ரான்.. சீனா குற்றச்சாட்டு!

Published

on

அமெரிக்கா, கனடா வழியாகச் சீனா வந்த தபால்களில் ஓமிக்ரான் தொற்று பரவியதாகச் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்கள் நாட்டில் ஓமிக்ரான் தொற்று பரவலுக்குக் காரணம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த தபால்களே காரணம்.

சீனாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் கனடாவிலிருந்து அமெரிக்கா, ஹாங் காங் வழியாக பீஜிங் வந்த தபால் ஒன்றில் ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காகச் சர்வதேச தபால்களின் மாதிரிகளை சேகரித்துள்ளதாகவும் அந்த உரைகளில் நடத்தப்பட்ட நியூக்ளிக் அமில சோதனையில் ஓமிக்ரான் தொற்று உறுதியானதாகச் சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Trending

Exit mobile version