உலகம்

மீண்டும் வரும் புதிய கொரோனா!… எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்….

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

அதன்பின், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தோன்றியது. மேலும்,. இந்தியா உள்பட 90 நாட்களுக்கு மேல் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் சுகாதார துறை தீவிர முயற்சி எடுத்தனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் வேமகாக பரவி வருகிறது. பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதேநேரம், ஒமிக்ரான் வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியது பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுத்தது.

virus

அதன்பின், டெல்மிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது பரவி வருவதாகவும் இந்த வைரஸ் டெல்டா கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய வைரஸ்களின் கலவையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இது எந்த அளவுக்கு மனித இனத்தை பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின்னரே இதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் கூறப்பட்டது. சில நாட்கள் கழித்து, இஸ்ரேலில் ஒரு புதிய வகை வைரஸ் பரவ துவங்கியுள்ளது. இதற்கு ப்ளோரனா என பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒருபக்கம் கொரோனா 3வது அலையும் இந்தியாவில் துவங்கி பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், NeoCoV எனும் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவி வருவதாக சீனாவின் வுஹானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, இதனால் தொற்று, இறப்பு விகிதம் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Trending

Exit mobile version