உலகம்

முதல் உள்நாட்டு பயணிகள் விமானம்.. சீனா செய்த சாதனை!

Published

on

சீனா தனது முதல் உள்நாட்டு பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ள நிலையில் அந்த விமானம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

சீனா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை இயக்கியது. ஷாங்காய் விமான நிலையத்தில் நடந்த விழாவில் இந்த விமானம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் சி919 விமானம் என்ற வார்த்தைகள் சீன மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த இந்த விமானம் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்திற்கு 15 நிமிட பயணமாக தனது முதல் பயணத்தை மேற்கொண்டது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானத்தில் 164 இருக்கைகள் உள்ளன என்றும் ஏர்பஸ் ஏ 320 மற்றும் போயிங் 737 மாக்ஸ் மாடல்களுக்கு இந்த விமானம் கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதமே இந்த விமானம் பாதுகாப்பு செயல்பாட்டிற்காக சான்றிதழ் பெற்றதையடுத்து தற்போது இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இன்னும் அதிக உள்நாட்டு விமானங்கள் சீனாவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் தொழில் மோதலுக்குப் பின்னர் சீனா தனது முதல் பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானத்தை சீனாவே தயாரித்தாலும் இந்த விமானத்தில் இருக்கும் பாகங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் 2030ஆம் ஆண்டு ஆண்டுக்குள் 25 சி919 விமானங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version