இந்தியா
சிறுத்தைக்கு வைத்த கூண்டுக்குள் சிக்கிய கோழி திருடன்!

சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைக்க இறையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்ற கோழி திருடன் ஒருவன் அந்த கூண்டுக்குள் சிக்கி மாட்டிக்கொண்ட பரிதாப சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

#image_title
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால் பசேந்துவா எனும் பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை சிக்க வைக்க கூண்டு ஒன்றை தயார் செய்து வைத்தனர். அந்த கூண்டுக்குள் சிறுத்தையை சிக்க வைக்க அதற்கு இரையாக கோழி ஒன்றை கட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த கோழியை திருட திட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், எதையும் யோசிக்காமல் சிறுத்தைக்கு வைத்த கூண்டுக்குள் சென்று கோழியை பிடித்துள்ளார்.
அவர் கோழியை பிடித்துவிட்டு வெளியே வர முயன்றபோது கூண்டு தானாக மூடிவிட்டது. இதனால் அவர் கூண்டுக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டார். வெளியே வர முடியாமல் உள்ளே தவித்துக்கொண்டிருந்த அவரை பலமணி நேரம் கழித்து பார்த்த வனத்துறையினர் கூண்டிலிருந்து மீட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.