தமிழ்நாடு

46வது சென்னை புத்தகக் காட்சி எங்கு? எப்போது?

Published

on

சென்னையில் 46வது புத்தகக் காட்சி, 2023-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம்.

அப்படி சென்னையில் 46வது புத்தகக் காட்சி, 2023-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தொடங்கப்பட்டு ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

book festival

இந்த புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேதிகள் உறுதி செய்யப்பட்டு , திறப்பு விழா குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை 46வது புத்தகக் காட்சி நந்தனத்தில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும். ஜனவரி 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடைபெற உள்ளது என சில நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

Trending

Exit mobile version