தமிழ்நாடு

சுதந்திர தின ஏற்பாடுகள்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

Published

on

நாளை சுதந்திர கொண்டாட்டங்கள் நடைபெறுவதையொட்டி சென்னையில் நாளை மட்டும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து சென்னை முழுவதும் பல சாலைகளில் காலை 6 மணி முதல் சுதந்திர தின விழா முடியும் வரையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமைந்துள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதி வரை அமைந்து உள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டு உள்ள சாலைகளில் வாகனங்கள் ஏதாவது செல்ல வேண்டும் என்றால் வாகன அனுமதி அட்டை பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளுக்குப் பதிலாக வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கும் மாற்று வழி பலகைகளைப் பார்த்து பின்பற்றிக் கொள்ளவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version