தமிழ்நாடு

இனி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் குறித்த அறிவிப்புகள் கிடையாதா.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

இனி சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் குறித்த அறிவிப்புகள் கிடையாது என அறிவித்துள்ளது பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை இந்தியாவின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாற்றியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இனி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு ரயில் குறித்த அறிவிப்புகள் இல்லாமல், ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரத்தை விமான நிலையங்கள் போன்று டிஜிட்டல் தகவல் பலகை மற்றும் பிரெய்ல் போர்டுகள் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரயில் பயணிகள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஊனமுற்றவர்கள், காது கேளாதவர்கள், கண் தெரியாதவர்களுக்கு இது பெரும் சிக்கலாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பல நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11வது பிளாட்பாரம் அருகில் உள்ள டிஜிட்டல் போர்டு வேலை செய்வதில்லை.

மேலும் தொலைக்காட்சி பெட்டிகளில் ரயில் வருகை, புறப்பாடு நேரத்தைத் தவிர விளம்பரமே அதிகமாக உள்ளது. இப்படி இருக்கையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த முடிவு ரயில் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கூறிவருகிறார்கள்.

Trending

Exit mobile version