இந்தியா

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ ரெய்டு: கண்டுகொள்ளாத காங்கிரஸ்!

Published

on

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவருக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர். சென்னை, சிவகங்கை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப சிதம்பரம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும், கார்த்தி சிதம்பரம் தற்போது லண்டனில் இருக்கும் நிலையில் திடீரென இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னையில் உள்ள ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது காங்கிரஸ் கட்சியினர் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் யாரும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது கட்சி தொண்டர்கள் வீடுகளில் முன் குவிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை செய்தபோது அக்கட்சியின் தொண்டர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் தற்போது ப சிதம்பரத்திற்கு எதிராக இருப்பதால் இந்த அமைதி நிலை என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version