தமிழ்நாடு
ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்கு

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருவது ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பிக்கள் ஆன ஆ ராசா மற்றும் தயாநிதி மாறன் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கடந்த சில நாட்களாக திமுக தரப்பில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் முதல்வர் குறித்தும் அவருடைய தாயார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ ராசா அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் தயாநிதி மாறனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் திண்டுக்கல் லியோனி ஆபாசமாக பேசியதாகசும் கூறப்பட்டது

தயாநிதி மாறன்
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தேர்தல் பரப்புரையில் அவதூறாக பேசியதாக திமுக எம்பிக்கள் ஆ ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீதும் திண்டுக்கல் லியோனி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

















