Connect with us

பர்சனல் பைனான்ஸ்

செல்வ மகள், பிபிஎப், பிற சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பு!

Published

on

சிறு சேமிப்புத் திட்டம், வட்டி விகிதம், உயர்வு, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், Government, Hikes, Small Savings Schemes, Interest Rate, Third Quarter, small savings schemes in Tamil, Small savings rates hiked, new interest rates on post office schemes

2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி

பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

செல்வ மகள் திட்டம் – சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வ மகள் திட்டம் என்று அழைக்கப்படும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 8.4 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்

மூத்த குடி மக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம், 8.6 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தேசிய சேமிப்பு பத்திரம்

தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

5-வருட அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட்

5-வருட அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம், 7.2 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.

கிசான் விகாஸ் பத்ரா

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதலீட்டுக் காலம் 124 மாதங்களாக உயர்த்தப்பட்டு வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலக டெர்ம் டெபாசிட்

அஞ்சல் அலுவலக டெர்ம் டெபாசிட் திட்டத்தில் 1 முதல் 3 ஆண்டு வரை முதலீடு செய்யும் போது 5.5 சதவீதமும், 5 வருடம் ம்னுதலீடு செய்தால் 6.7 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.

சேமிப்பு கணக்கு

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே 4 சதவீதமாகவே தொடரும்.

குறிப்பு

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இந்த வட்டி விகிதம் 2020 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தொடரும்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?