ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடியாக சரிவு!

ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடியாக சரிவு!
ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியின் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வசூல் 99,939 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் ஜூன் மாதம் 99,939 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

ஜூன் மாதம் வசூலான 99,939 கோடி ரூபாய் ஜிஎஸ்டியில் மத்திய ஜிஎஸ்டி 18,366 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 25,343 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 47,772 கோடி ரூபாய், செஸ் 8,457 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்ட ஜிஎஸ்டிக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள். 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் 95,610 கோடி ரூபாயாக இருந்தது.

2018-2019 நிதியாண்டின் சராசரி ஜிஎஸ்டி வசூல் 98,114 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போதும் ஜூன் மாதம் 1.86 சதவீதம் அதிகமான ஜிஎஸ்டி வரி வசூல் நடைபெற்றுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com