வணிகம்
பிளிப்கார்ட்டின் அடுத்த அதிரடி.. பிக் தீபாவளி விற்பனை.. 80%வரை சலுகை!
பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய பிறகு முதன் முறையாகப் பிக் பில்லியன் டே விற்பனை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் நவம்பர் 1 முதல் பிக் தீபாவளி விற்பனையினை அறிவித்துள்ளனர்.
நவம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பிக் தீபாவளி விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை அணிகலன்கள் மற்றும் மரச் சாமானங்கள் போன்றவற்றுக்கு 80 சதவீதம் வரை சலுகை அளிக்க உள்ளது.
எனவே பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சலுகையின் கீழ் எந்தப் பொருட்கள் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று இங்குப் பார்ப்போம்.
ஐந்து நாட்கள் விற்பனையில் 1000 கணக்கான பொருட்களுக்கு 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிரடி டீல்கள் மற்றும் இரவு 8 மணிக்கு ரஷ் ஹவர் டீல் சலுகை போன்றவையும் வழங்கப்பட உள்ளது.
பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக இந்தச் சலுகை எல்லாம் அக்டோபர் இரவு மணி முதல் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்
ரூ. 13,999 மதிப்பிலான ஹானர் 9N போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும், நோக்கியா 5.1 பிளஸ் 10,499 ரூபாய்க்கும், ரியல்மி 2 பிரோ 13,990 ரூபாய்க்கும் கிடைக்கும்.
எலக்ட்ரானிக்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற உபகரணங்கள் மீது 80 சதவீதமும், டிவி மற்றும் பிற வீட்டுச் சாதனங்கள் மீது 75 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. 66,000 ரூபாய் மதிப்பிலான வியூ ஸ்மார்ட் டிவி43,999 ரூபாய்க்கும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும். டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு 15,000 ரூபாய் வரை சலுகையும் அளிக்கப்படுகிறது.