தமிழ்நாடு

பம்பர் டு பம்பர் காப்பீடு: உயர்நீதிமன்றம் நிறுத்தி வைப்பு!

Published

on

புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீட்டு கட்டணம் என்றும் அதே போல் பம்பர் டு பம்பர் காப்பீடு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த காப்பீட்டின் அடிப்படையில் 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்பு பொருள் இழப்பு ஆகியவற்றுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை ஈரோடு நீதிமன்றம் விதித்ததை அடுத்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பம்பர் டூ பம்பர் என்னும் புதிய திட்டத்தின்படி காப்பீடு செய்து வாகனம் வாங்குவதில் வாகனம் வாங்குபவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் வாகனம், மூன்றாவது நபர், ஓட்டுநர், என உரிமையாளர்கள் தன் வசதிக்கு ஏற்ப காப்பீடு செய்வதற்கு பதிலாக பம்பர் டு பம்பர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்வதால் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்

மேலும் 5 ஆண்டுகளுக்கு மொத்த காப்பீடு செய்ய வேண்டி உள்ளதால் நான்கு சக்கர வாகனங்களுக்கு குறைந்தது இரண்டு லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் வாகன உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version