உலகம்

நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்பி: என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்பி ராஜினாமா செய்த நிலையில் முழுக்க முழுக்க தன்னுடைய தவறுதான் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் எம்பி நீல் பாரிஷ் என்பவர் நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்ததாக பெண் எம்பி ஒருவர் புகார் அளித்தார் .

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆபாச படம் பார்த்த நீல் பாரிஷ் எம்பி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார் .

இணையதளத்தில் டிராக்டர் ஒன்றை தேடும் போது எதிர்பாராத விதமாக ஆபாச படம் வந்தது என்றும், ஆனாலும் நான் செய்தது பெரிய தவறு என்றும் என்னுடைய செய்கையால் என்னுடைய குடும்பம் மற்றும் தொகுதிக்கு மிகப்பெரிய இழுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் நான் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version